In Perambalur northeast monsoon in the district is faced with the volunteers Discussion

dro-1 பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளுவது குறித்து கிராமங்களின் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சேவை சங்கங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) துரை தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில்
நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:

வடகிழக்கு பருவமழையின்போது பொதுமக்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்லாமலும், அதனை தொடாமலும் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க தங்கள் பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு அநிவுறுத்த வேண்டும். மேலும் நீர்நிலைகள் நிரம்பும் போது மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
நீர்வரத்து பகுதிகளில் உள்ள முட்புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றிடவும், மதகு பாலங்களின் கீழே உள்ள அடைப்புகளை சரிசெய்திடவும், கால்நடைகளை குளம், ஆறு, வாய்க்கால் கரையோரங்களில் இரவு நேரங்களில் தங்க வைக்கமால் இருக்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

மழையினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டறிந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், பேரிடர் காலங்களில் இயற்கை இடர்பாடு ஏற்படுகின்ற போது மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் செயல்பட்டு வரும் அவரச கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ஐ பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் அமைதியான அணுகுமுறையினை கையாண்டு மீட்புப்பணியினை திறம்பட செய்திடவும், இப்பணிகளில் மீட்புக்குழுவினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பொதுமக்களை காத்திட வேண்டும், என கேட்டுக் கொண்டார்.

இக்குழுக்கூட்டத்தில், அரசு பணியாளர்கள், 47 கிராமங்களை சேர்ந்த தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் சேவை சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!