In Perambalur special voters list abstract reconstruction of the camp in the district: 6530 people petition.
பெரம்பலூர் மாவட்டத்தில் 638 வாக்குச்சாவடி மையங்களில் இன்று நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி முகாமில் 6530 மனுக்களை பொதுமக்கள் அரசு அலுவலர்களிடம் கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2017ம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணி 01.09.2016 முதல் 30.09.2016 வரை நடைபெறுகிறது.
அது சமயம் 01.01.2017 ந் தேதியினை தகுதியான நாளாக கொண்டு 18 வயது பத்தியான வாக்காளர்களின் பெயர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும் பெயர் முகவரி போன்ற திருத்தங்களை மேற்கொள்ளவும், பெயர் நீக்கம் செய்யவும் 11.9.2016 மற்றும் 25.9.2016 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இரண்டாம் கட்டமாக இன்று (25.09.2016) ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் அந்தந்த வாக்குசாவடிகளில் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 638 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் இன்று காலை 09.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. இதில் பெயர் சேர்க்க (படிவம் 6)- 4621 நபர்களும் நீக்கம் செய்ய (படிவம் 7)- 242 நபர்களும் பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்ய (படிவம் 8)- 998 நபர்களும் , பாகம் விட்டு பாகம் மாறுதல் செய்ய (படிவம் 8எ)- 669 நபர்களும் என ஆக மொத்தம் 6530 மனுக்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3127 நபர்களும் பெண் வாக்காளர்கள் 3403 நபர்களும் இதில் அடங்குவர்.