பெரம்பலூர்: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள (09.04.16) அன்று நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் சேவை மையங்களை பயன்படுத்த, பொதுமக்களிடம் கல்லூரி மாணவிகள் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்ப்படுத்த வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி பேசினார்.
சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில், வாக்களிப்பதன் அவசியத்ததை உணர்த்திடும் வகையில் கல்லூரி மாணவிகள் மூலம் உருவாக்கப்பட்ட தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ரங்கோலி கோலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பார்வையிட்டார்.
அதன் பின்னர் வாக்குப் பதிவு தினமான மே 16 குறித்து பொதுமக்களிடயே விழிப்புணர்வு ஏற்ப்படுத்திடும் வகையில் கல்லூரி மணவிகள் மே 16 என்ற வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் வாக்காளிப்பது குறித்து மாணவிகளிடையே நடத்தப்பட்ட கவிதைப்போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளின் படைப்புகள் மேடையில் அரங்கேற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:
தங்களின் பகுதிகளில் 18 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதையும், வாக்காளர் அடையாள அட்டை பெற்று விட்டனரா, என்பதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டடியலில் சேர்க்காத நபர்களிடம் சென்று, தங்களது பகுதிகளுக்குட்ப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம் மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் வருகின்ற சனிக்கிழமை (09.04.16) அன்று நடைபெற உள்ள சிறப்பு வாக்காளர் சேவை மையங்களை பயன்படுத்திகொண்டு பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என்பதை அவர்களுக்கு தேவையான தகுந்த விழிப்புணர்வுகள் மூலமாக அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 18004257031 என்ற எண்ணிலும்,
மாவட்ட காவல் கண்கானிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04328 – 225322 என்ற எண்ணிலும்,
வருமான வரித்துறை தொடர்பான புகார்களை மாநில அளவில் செயல்பட்டுவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 18004256669 என்ற எண்ணிலும்,
வாட்ஸ்அஃப் மூலமாக புகார் தெரிவிக்க 9444123456 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான தங்களது புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம், என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, சாரதா கல்வியியல் கல்லூரி முதல்வர் லீலாகேனலெட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.