In Perambalur struck near the property dispute between husband and wife in jail for obstruction
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்களூர் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மன்னர்மன்னன்(46), இவருக்கு விஜயா(36), சுதா(28) என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர்.
இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஜயா கனவரை பரிந்து சென்று அதே ஊரில் மகன் விமல்சந்திரனுடன்(15) வசித்து வருகிறார்.
இந்நிலையில் மன்னர்மன்னனுக்கு சொந்தமான இடத்திற்கு உரிமை கோரி விஜயா கொட்டகை அமைத்தாக தெறிகிறது.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த மன்னர்மன்னன் குடிபோதையில் வந்து தகராறு செய்து தன்னை தாக்கியதில் காயமடைந்ததாக விஜயா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தன்னை உள் நோயாளியாக அனுமதித்து கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இதுகுறித்து மங்களமேடு போலீசாரிடம் விஜயா அளித்த புகாரின் பேரில் எஸ்.ஐ.,சுப்ரமணியன் வழக்கு பதிந்து மன்னர்மன்னனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி பெரம்பலூர் கிளைச் சிறையில் அடைத்தார்.