#In Perambalur teacher’s home 12 sovereing in jewelry, cash Rs .7500 theft: police investigation
பெரம்பலூர் நகரில் ஆசிரியை வீட்டில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 12 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ.7 ஆயிரத்து 500-யை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் தீவிர தேடி வருகின்றனர்.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை நசீராபேகம் (வயது 40), வீட்டில் உள்ளவர்கள் நேற்று வெளியூர் சென்றிருந்தாலும், தனி வீடாக இருப்பதாலும், இவர் நேற்றிரவு வீட்டினுள் தூங்காமல் அருகே உள்ள வீட்டினுள் தனது குழந்தைகளுடன் தூங்கினார்.
இன்று காலை வீட்டை வந்து பார்த்த போது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், பீரோ மற்றும் சூட்கேசில் வைக்கப்பட்ருந்த 12 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கம் ரூ. 7 ஆயிரத்து 500-யை எடுத்து சென்றிப்பது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு, தடவியல் மற்றும், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர மேற்கொண்டுள்ளனர்.