In Perambalur, the 137th Anniversary Launch of the Indian National Congress Party; Flagging sweets were provided.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், இன்று காலை, காங்கிரஸ் கட்சியினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தங்க. தமிழ்செல்வன் தலைமையில், முன்னாள் முதல்வர் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து
கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேசிய பொறுப்பாளர் வி. ஜான்அசோக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில்
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிவாஜிமூக்கன், குரு.தங்கவேல், மாவட்ட துணை தலைவர் ஆசைத்தம்பி, அருமடல்.அருணாசலம், மாவட்ட பொது செயலாளர்
வெங்கனூர் சின்ராஜ், ஓ.பி.சி. துறை மாவட்ட தலைவர் சாமிதுரை, சமூக ஊடக துறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ்காந்தி, மகிளா காங்கிரஸ் வட்டார தலைவி
சந்திரா, லப்பைகுடிகாடு நகர தலைவர் சபி.அகமது, இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர், முகமது அலி ஜின்னா, நகர செயலாளர் துறைமங்கலம் நீலகண்டன், மேட்டாங்காடு செந்தில் பிரசாத், பெரம்பலூர் சசிகுமார், எசனை நல்லதம்பி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.