In Perambalur, there is no charge for cremation of the dead! Within an hour of receiving the complaint, Chief Minister Mukha Stalin’s action!
பெரம்பலூர் எரிவாயு தகன மேடையில் இறந்தவர்களின் சடலங்களை எரியூட்ட அதிக கட்டணம் வசூல் செய்வதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்ற புகாரையடுத்து, ஒரு மணி நேரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தார். அதன் பேரில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்ததின் பேரில், எம்.எல்.ஏ. பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்! இறந்தவர்களை இலவசமாக எரியூட்டலாம், அதற்கு எவ்வித கொரோனா 2ம் அலை முடியும் காலம் வரை கட்டணமும் வசூலிப்பதில்லை என நகராட்சி ஆணையர் குமரிமன்னன் அறிவித்துள்ளார். தமிழக அரசுக்கு பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.