In Perambalur unidentified male body was in hospital: police
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத ஆண் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று மாலை போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் இறந்த கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை கைப்பற்றி சோதனையிட்டனர் போலீசாரின் சோதனையில் சுமார் 45 வயது மதிக்க தக்க, 5.5 அடி உயரத்துடன், ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் பூ கட்டம் போட்ட கைலியும், கருப்பு வெளிர் நிற ஊதா நிற சட்டையும், வலது முழங்கால் பகுதியில் காயமும், தலை முடி நரைத்தும், மிக குறைவாக இருப்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ஆணின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு பிணவறைக்கு அனுப்பி வைத்து, இறந்த பெரம்பலூர் (தெற்கு) வி.ஏ.ஓ.,சுரேஷ்(33) அளித்த புகாரின் பேரில் வழக்கு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நட்த்தி வருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரம்பலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.