பெரம்பலூர் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவிற்காக பீஹார் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டது.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப் பாட்டுக் கருவிகள் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது.
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு பயன்படுத்தும் வகையில் தலைமைத் தேர்தல் ஆணையரின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 1,164 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் 961 கட்டுப்பாட்டுக்கருவிகளும், வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 647 வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் 493 கட்டுப்பாட்டுக்கருவிகளும் உத்திரபிரதேச மாநிலம் சித்ரகுட் மாவட்டத்திற்கு இன்று (26.07.16) பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
சித்ரகுட் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஹரீஸ் குமார் தலைமையிலான குழுவினர், பெரம்பலூர் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து உத்திரபிரதேச மாநிலத்திற்கு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டுக்கருவிகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்றனர்.