In Perambalur wandered the streets at 5 psychopaths recovery by police dept
பெரம்பலூர் நகரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சுற்றி திரிந்து வந்த தகவல் அறிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இயங்கி வரும் ஹியூமன் டிராபிங்கிங் சிறப்பு காவல் பிரிவு உதவி ஆய்வாளர் மாலதி தலைமையில் ஒரு வாகனத்தில் சென்று மணி (வயது24), மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சீதாகுமாரி (24), சீனு (40), பில்லு (35) மற்றும் பெயர் விபரம் தெரியாத 40 வயது மதிக்க தக்க பெண் உள்பட 5 பேரை பிடித்து, பெரம்பலூர் குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
விசாரித்த நீதிபதி சுஜாதா 5 மனநோயாளிகளையும் பெரம்பலூரில் உள்ள காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க உத்திரவிட்டார்.