In school, colleges and eradicate the black money is brought e- transaction MP Ila.Ganesan
கருப்பு பணம் ஒழிக்க பள்ளி, கல்லூரி, மற்றும் பல்கலைக்கழகங்களிலும் மின்ணனு பரிவத்தனை கொண்டு வரப்படும். கருப்பு பணம் ஒழிப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது என ராஜ்ஜிய சபா எம்.பி., இல கணேசன் தெரிவித்தார்.
பெரம்பலூரில் நேற்று பக்தர்கள் மாநாடு துவங்கி இன்று இரண்டாம் நாளாக நடந்தது அதில் ராஜ்ஜிய சபா எம்.பி., இல கணேசன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது
கருப்பு பணம் ஒழிப்பதில் பாராபட்சமின்றி அனைத்து துறைகளில் கொண்டு வர முயற்சி செய்யப்படுகிறது. மக்கள் மனநிலை மாறாவேண்டும், ஒரு வீட்டு மனை பத்திரம் எழுதினால் கூட அதன் முழு மதிப்பை காட்டாமல், பத்திரம் எழுதும் போதும் , பணம் பரிமாற்றத்தின் போது கருப்பாக எவ்வளவு தரவேண்டும், வெள்ளையாக தரவேண்டும், என குறைத்து பத்திரம் எழுதுகின்றனர். மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் எவ்வளவு என்ற மனநிலை மக்கள் மாற்றி கொள்ள வேண்டும். இரண்டு விதமான பரிமாற்றம் பேச்சுக்கே மக்கள் இடம் கொடுக்க கூடாது. வெள்ளையாக அனைத்து கொண்டு வரவேண்டும். பள்ளி கல்லூரிகளில் கூட இதற்கு விதிவிலக்கல்ல அங்கேயும், கருப்பு வெள்ளை என்ற பரிமாற்றத்தை மக்கள் புறகணிக்க வேண்டும். காசோலை, வரைவோலை அல்லது மின்ணனு பமூலமாக பரிவர்த்தனை மேற்கொள்ள படிப்படியாக அமலாக்கப்படும் என தெரிவித்த அவர் மேலும், ரூபாய் நோட்டுக்களை பல்வேறு பொருளாதார நிபுணர்களும் ரூபாய் செல்லாதாக அறிவித்து கருப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர். ஆனால், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை பற்றி சிந்திக்காமல், கட்சி காப்பாற்றுவதை குறிக்கோளாக கொண்டு செய்யவில்லை. பிரதமர் மோடி, கட்சியை காப்பாற்ற வேண்டுமென நினைக்காமல், நாட்டு மக்களை காக்கவே ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்து கருப்பு பண ஒழிப்பில் அக்கறை காட்டி உள்ளார் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர் கட்சத்தீவு காங்கிரஸ் ஆட்சியிலே தொலைபேசி வாயிலாக தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது. அது பாரத நாட்டுக்குள் இருக்குமானால் அதை மீட்க அனைத்து நடவடிக்கையும் இந்த அரசியல் சார்பில் மேற்கொள்ளப்படும் என்றும், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த விவகாரம், நீதிமன்றத்தில் இருப்பதால் அதுப்பற்றி அதிகம் கருத்து தெரிவிக்க முடியாத என்றவர், அன்னிய பொருட்கள் மீதான மோகம் ஒழிய வேண்டும், காவிரி விவசாகரத்தில் நதி நீர் பிரச்சனைக்கு தீர்வு காண விந்திய மலைக்கு தெற்கு, வடக்கு என பிரித்து மகாநதி, கிருஷ்ணா நதி இணைத்து, பின்னர் காவிரியை இணைப்பதன் மூலம் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும் என்றும் தெரிவித்தார். பேட்டியின் போது பா.ஜ.க முக்கிய பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.