In the perambalur district, Taluck level science exhibition held tomorrow

பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விடுத்துள்ள தகவல்:

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல், கணிதம் மற்றும் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கும் வகையில் மாணவ, மாணவிகளின் படைப்புகளை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குறுவள மைய அளவில் அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இவ்வாண்டிற்கான குறுவள மைய அளவிலான அறிவியல் கண்காட்சி நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டி அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெரம்பலூர், வேப்பூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் வட்டார வள மையங்களுக்குட்பட்ட குறுவளமைய அளவில் நடைபெற உள்ளது.

இந்த அறிவியல் கண்காட்சியில் “நிலையான வளர்ச்சியில் புதுமைகளின் பங்கு” எனும் தலைப்பில் ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு, கழிவு மேலாண்மை மற்றும் நீர்பாசன பாதுகாப்பு, டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் சார்ந்த படைப்புகளை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவிகள் தங்கள் படைப்புகளை காட்சிபடுத்த உள்ளனர்.

இக்கண்காட்சி பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை மற்றும் வேப்பூர் ஆகிய வட்டார வள மையத்திற்குட்ப்பட்ட குறுவளமையங்களில் நடைபெறவுள்ளது. எனவே மாணவ மாணவிகள் இக்கண்காட்சியில் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திக்கொள்ளலாம் என இன்று தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!