In the Perambalur Temple of Arivu Thirikovil, the Manaivi Nala Vetbu Vila
ரம்பலூர் அறிவு திருக்கோவிலில் மனைவியை பெருமை படுத்தும் விதமாக நடைபெற்ற “மனைவி நல வேட்பு விழா ” – 100க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர்.
வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய மனைவி லோகாம்பாளின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மனைவி நல வேட்பு விழா, பெரம்பலூர் அறிவுத் திருக்கோவில் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் நேற்று நடத்தப்பட்டது.
அறக்கட்டளை தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள் ராதாலெட்சுமி, வெற்றிச்செல்வி ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக திருச்சி மண்டல துணை தலைவர் பேராசிரியர் ராஜேந்திரன் மனைவி நல வேட்பு விழாவின் சிறப்புக்கள் குறித்து பேசினார்.
விளம்பரம்:
இதில், தம்பதியினர் கணவர்-மனைவியிடையே காப்பு கட்டிக் கொள்ளுதல், மலர் கொடுத்தல், கனி கொடுத்தல், மற்றும் கண்களால் ஒருவரைக் கொருவர் காந்த பரிமாற்றம் செய்து கொண்டனர். இந்நிகழ்வின் மூலம் கணவர்-மனைவியிடையே சண்டை சச்சரவுகள் விலகி, மன மகிழ்ச்சியும், ஒருவருக் கொருவர் தங்களது அன்பினை பரிமாறிக் கொண்டனர். மேலும் இது போன்ற நிகழ்வுகள் மூலம் வாழ்க்கை துணையாக இருக்கும் மனைவியை பெருமை படுத்தும் விதமாக அமையந்தது. நூறுக்கும் மேற்பட்ட தம்பதியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மன்ற பொருளாளர் கருப்பையா வரவேற்றார். மன்ற செயலாளர் சாந்தகுமார் நன்றி கூறினார்.