Independence Day Celebration: Gram Sabha Meeting in Alambadi Panchayat; Perambalur Collector Venkatabriya, MLA Prabhakaran participation!

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 121 ஊராட்சிகளிலும் இன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சுகாதாரம் குறித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மான்ய நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் விவரம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு-கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் – ஊரகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


மேலும், வீடு வழங்கும் பயனாளிகளின் பெயர் பட்டியல் வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. வரவு செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, ஆர்.டி.ஓ. நிறைமதி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சரவணன், உதவி இயக்குநர் ஊராட்சிகள் கணபதி, ஒன்றிய சேர்மன் மீனாஅண்ணாதுரை, துணை சேர்மன் சாந்தாதேவிகுமார், ஆலம்பாடி ஊராட்சித் தலைவர் கல்பனா சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!