Independent day better to celebrate with the staff of the District Revenue Officer Discussion all dept
பெரம்பலூரில், நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் இன்று (03.08.16) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி தெரிவித்ததாவது:
நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர;களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் விழா நடைபெறும் அன்று காவல் துறையினர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல்துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும்.
மேலும், விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையினர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் வழங்கப்படும் பயனாளிகளின் பட்டியல் குறித்து 5.8.2016க்குள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்துதல் உள்ளிட்ட பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் பணிகளை சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட துறையினர; சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும் விழா சிறப்பாகவும், அமைதியாகவும் நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என பேசினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர;முக உதவியாளர் (பொது) மாரிமுத்து, பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.