Indian Prime Minister’s housing project may apply for a meritocracy – Perambalur municipal commissioner notice.
இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளதாவது:
நகர்புற மேம்பாட்டிற்காக மாவட்ட அளவிலான ஏழை மற்றும் குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பத்தினர; அனைவருக்கும் வீடு வழங்கும் பொருட்டு, பெரம்பலூர் நகராட்சியில் பாரத பிரதமரின் வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் நபர;களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின் 4 உட்கூறுகளில் ஒன்றான கடனுடன் இணைக்கப்பட்ட மான்ய திட்டம் அடிப்படையில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, ஆண்டுவருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருவாய் உள்ள பிரிவினருக்கு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையினர் என்ற அடிப்படையில் ரூபாய் 6.5 லட்சத்திற்கான வட்டியுடன் கூடிய மானியத்துடன் வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அதிகப்படியாக 30 சதுர மீட்டர் (323 சதுர அடி) நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்.
அதேபோல ரூ.3 முதல் ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள நபர்களுக்கு குறைந்த வருவாய் உள்ள பிரிவினர் என்ற அடிப்படையில் ரூபாய் 6.5 லட்சத்திற்கான வட்டியுடன் கூடிய மானியத்துடன் வங்கிக்கடன் பெற்றுத்தரப்படும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற 60 சதுர மீட்டர; (646 சதுர அடி) நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்.
இம்மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழும் மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவர்கள் பெரம்பலூர் நகராட்சி ஆணையரை நேரில் தொடர்புகொண்டு உரிய படிவத்தில் குறிக்கப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம், என தெரிவித்துள்ளார்.