Inspection of school vehicles led by Perambalur Collector; RTO information to present!


பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், தமிழ்நாடு அரசு பள்ளி வாகன ஆய்வுச் சட்டத்தின் படி, ஒவ்வொரு ஆண்டும், மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்படும், கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் இயங்க முடியாத நிலையில் இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைவாக இருப்பதால், தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி, நெறிகாட்டு வழிமுறைகளுடன் இயங்கி வருகிறது.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் சுமார் 400 பள்ளி வாகனங்கள், வரும் செப்.28 அன்று, பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா, டி.எஸ்.பி, சி.இ.ஓ., மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் அடங்கிய குழு ஆய்வு செய்ய உள்ளது.

அரசு விதிகள் படி, மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனம், மஞ்சள் நிறத்துடன், திறமையான தகுதி வாய்ந்த ஓட்டுனர்களை அமர்த்தி, உதவியாளருடன் இயக்கப்பட வேண்டும், வாகனத்தில், தீயணைப்பான், முதலுவதவி பெட்டி, அவசர கால கதவு இருக்க வேண்டும், வாகனங்களில், ஆர்.டி.ஓ, போலீஸ், தீயணைப்பு மற்றும் விபத்து மீட்புப்படை ஆகியோரின் தொடர்பு எண்கள் எழுதபட்டிருக்க வேண்டும். அளவிற்கு அதிகமாக மாணவர்களை ஏற்றி செல்லக் கூடாது.

எனவே, சீருடை அணிந்த ஓட்டுனர்கள் மூலம் பள்ளி நிர்வாகிகள், மாவட்டத்தில், உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும், ஆஜர்படுத்த வேண்டும் என வட்டார போக்குவரத்து அலுவலர் க.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!