Intermittent rain at various places in the perambalur district: people happy
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று காலை முதலே மழை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பொழிந்து வருகிறது. நெல், கரும்பு, உள்ளிட்ட இறவை சாகுபடி செய்துள்ள மகிழ்ச்சி அளித்திருந்தாலும், மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகசூல் பாதிக்குமோ என அஞ்சுகின்றனர்.
இந்நிலையில் குளிர் காற்று வீசி வருவதால் ஊட்டி கொடைக்கானலை போன்று தட்பம் வெப்பம் நிலவி வருகிறது. மேலும், பகலில் குளிர் காற்று வீசுவதால் வீடு மற்றும் அலுவலக அறைகளில் மின்விசிறி சுழல்வது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மின்சாரம் சேகரம் அதிகமாகி உள்ளது.