It is better to get a In Perambalur the Chief Minister at the Union veppur annadanam in the temple on behalf of the AIADMK.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் நலம் பெற வேண்டி சு.ஆடுதுறை குற்றம் பொருத்தவர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கினர்.
சு.ஆடுதுறை குற்றம் பொருத்தவர் ஆலயத்தில், வேப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழகு முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த யாககுண்டத்தில் கார்த்திக் குருக்கள் தலைமையிலான வேதவிற்பன்னர் குழு யாகம் வளர்த்து ஆயுள் விருத்திக்கான மிருதங்க ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து சிவனுக்கும், அம்மனுக்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள் உட்பட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஆராதனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், பெரம்பலூர் மாவட்ட செயலாளருமான ஆர். டி. ராமச்சந்திரன், வேப்பூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்தமிழ்செல்வன், ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் ராஜமாணிக்கம், ஒன்றிய கவுன்சிலர் அமுதா முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குன்னம் இளங்கோவன், திருமாந்துறை சுந்தரம், மற்றும் கழக நிர்வாகிகள் மருவத்தூர் வெள்ளையன், சிவகுமார், அந்தூர் ராஜேந்திரன், வேப்பூர் மணி, சித்தளி இந்திரா ராஜராஜன், குன்னம் கூட்டுறவு வங்கி தலைவர் குணசீலன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செந்தமிழ்தேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆயிரம் நபர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் அன்னதானம் வழங்கினர். இதில் பெரும் திராளாக அதிமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.