J Jayalalithaa’s Birthday Celebration: Perambalur District Secretary Ramachandran MLA presided over welfare program



பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று வெகு விமரிசையாக முன்னாள் முதலமைச்சரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவின் 72 வது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இன்று காலை முதலே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள கிராம கிளைக் கழக நிர்வாகிகள் கொடி கம்பங்களுக்கு அதிமுக கட்சியின் வர்ணம் பூசி புத்தம் புதிய கொடியை ஏற்றி, அலங்கரிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வணங்கினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் மிட்டாய்கள், பொங்கல் வழங்கி, பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். மேலும், ஏழை எளிய மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மக்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும், அக்கட்சி தொண்டர்கள் துணிமணிகள், போர்வைகள், அறுசுவை உணவும் ஆங்காங்கே வழங்கி வருகின்றனர்.

அதே போன்று பெரம்பலூர் நகரில் இன்று காலை பெரம்பலூர் மாவட்ட அதிமுக சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள ஜெ.ஜெயலலிதாவின் உருவ சிலைக்கு, மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ தலைமையில், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது,  மாணவரணி மாவட்ட செயலாளரும் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர். தமிழ்ச்செல்வன் மற்றும் முன்னாள் எம்.பிக்கள் மருதைராஜா, சந்திரகாசி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

வழக்கறிஞர் அணி பிரிவு சார்பாக கவுதமபுத்தர் அறக்கட்டளையின் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம், மாவட்ட தொழில் நுட்ப பிரிவு சார்பாக துறைமங்கலத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் மாணவர்களுக்கு உணவும், 21வது வார்டு பொறுப்பாளர்கள் சார்பில் துறைமங்கலம் டி.இ.எல்.சி பள்ளி மாணவர்களுக்கு நோட்டுபுத்தகமும், வெங்கடேசபுரத்தில் 6வது வார்டு உறுப்பினர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகளும்,


 காமராஜர் வளைவு மற்றும் சங்கு திடலில் கொடியேற்றி இனிப்பு வழங்குதலும்,, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றம் சார்பில் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் அணிவித்தல், குரும்பலூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே அன்னதானமும்,

வேப்பந்தட்டை ஒன்றியம் சார்பில் கிருஷ்ணாபுரத்திலும், ஆலத்தூர் ஒன்றியம் சார்பில் ஆலத்தூர் கேட் பகுதியிலும், பிற்பகலில் வேப்பூர் ஒன்றியம் சார்பில் குன்னத்தில்,  அன்னதான நிகழச்சிகளும்,  செந்துறை ஒன்றியம் சார்பில் செந்துறையில் அன்னதானமும், பல்வேறு அணிகள் சார்பில், பள்ளி குழந்தைகளுக்கு உணவும் எவர் சில்வர் தட்டும் வழங்கப்பட்டு வருகிறது.  இன்று  மாலை 6 மணியளவில், பெரம்பலூர் நகர அதிமுக சார்பில் பெரம்பலூர் வானொலித் திடலில் ஆயிரம் நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.

இந்நிகழச்சிகளின் போது மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை ஆர்.துரை,  ஒன்றிய செயலாளர்கள் கர்ணன் (ஆலத்தூர்), சிவப்பிரகாசம் (வேப்பந்தட்டை ), பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, ஆலத்தூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் குரும்பாபாளையம் நாகராஜன், வேப்பந்தட்டை ஒன்றிய இணைச் செயலாளர் பெரியம்மாள்நீலன்,  மற்றும் பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், கிளைக்கழக வார்டு உறுப்பினர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ பூவை செழியன், ,  பூலாம்பாடி வினோத், உள்பட முன்னாள் மற்றும் இந்நாள் சேர்மன்கள்,  ஊராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள்,  உள்ளிட்ட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

இன்று பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொடி தோரணங்கள் கட்டி திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. ஆங்காங்கே கிராம் மற்றும் நகரங்களில் வார்டு தோறும் ஜெ.ஜெயலலிதாவின் புகழ் பாடல்கள்  மைக் செட்டுகளில் ஒலித்து கொண்டு உள்ளது.

பின்னர் வரும் நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட்டு, ஏழை எளிய மக்களுக்கு அதிமுக கட்சி தொண்டர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்தி மக்கள் துறையினரின், புகைப்பட கண்காட்சியும், மாநில பெண்கள் பாதுகாப்பு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பாலக்கரை பகுதியில் பேரணி மனிதசங்கிலியும், தெரு நாடகமும் நடந்தது. அரும்பாவூரில், விழிப்புணர்வு பேரணியும், பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தின உறுமொழியும் எடுக்கப்பட்டது. 


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!