Jactto-Geo strike, road protest struggle for the 5th day in Namakkal; 450 people arrested

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் மாவட்ட அளவிலான ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 4750 பேரை போலீசார் கைது செய்தனர்.
பங்களிப்பு ஓய்வுதியத்தை ரத்து செய்து பழைய ஒய்வூதிய முறையினை நடை முறை படுத்திட வேண்டும்.
7வது சம்பள கமிஷன் பரிந்துரையில் உள்ள முரண்பாடுகளை களையும் நோக்கில் மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை தமிழக அரசு ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கூட்டு இயக்கத்தின் (ஜேக்டோ-ஜியோ) சார்பில் இன்று 5வது நாளாக திரளான ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் பார்க் ரோட்டிற்கு வந்தனர். காலை 9.30 மணி முதல் அங்கு வந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தங்களது போராட்ட இடத்தை மாற்றிக்கொண்டு ஆங்காங்கு நின்றுகொண்டிருந்த ஆசிரிர்கள் மற்றும் அலுவலர்கள் நாமக்கல் பஸ் நிலையம் முன்பு மெயின் ரோட்டில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 400 பெண்கள் உட்பட 450 பேரை கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச்சென்றனர்.