Job Officers: Anganwadi Workers, Small Anganwadi Workers Assistants
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் காலிப்பணியிடமாக உள்ள 45 அங்கன்வாடி பணியாளர்கள், 58 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 109 அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய, விண்ணப்ப படிவங்களின் மாதிரிகள் அந்தந்த வட்டார குழந்தைகள் வளா;ச்சித் திட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.
அங்கன்வாடி பணியாளர்களுக்கான தகுதி 01.07.2017 நாளன்று 25 வயதுக்கு குறையாமலும், 35 வயதுக்கு மிகாதவர்களாகவும் இருக்கவேண்டும். கணவனை இழந்தவர்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் (ம) மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகபட்ச வயது 40 வயதிற்கு மிகாமலும், மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 வருடங்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி என தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதர இனங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கான தகுதி 01.07.2017 நாளன்று 25 வயது முடிந்த 35 வயதுக்கு மிகாதவர்கள், கணவனை இழந்தவர்கள் கணவனால் கைவிடப்பட்டவர்கள் (ம) மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகபட்சமாக 40 வயது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது 20 வருடங்கள் எனவும், மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி என தளர்வு செய்யப்பட்டுள்ளது. இதர இனங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அங்கன்வாடி உதவியாளர்களுக்கு தகுதி 01.07.2017 நாளன்று 20 வயது முடிவுற்ற 40 வயது மிகாதவர்கள், கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிப்பவர்களுக்கு அதிகபட்ச வயதான 40 லிருந்து 5 வருடம் நீடித்து வழங்கப்பட்டுள்ளது. எழுதபடிக்க தெரிந்திருக்க வேண்டும்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்புநிலை ஊதியமாக ரூ.2500 – ரூ.5000 மும், தரஊதியமாக ரூ.500 ம், குறு அங்கன்வாடி பணியாளர்களுக்கு சிறப்புநிலை ஊதியமாக ரூ.1800 – 3300 மும், தர ஊதியமாக ரூ.400 ம், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு சிறப்புநிலை ஊதியமாக ரூ.1300 – ரு.3000 ம், தரஊதியமாக ரூ.300 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.
இனச்சுழற்சி அடிப்படையில் பணிநியமனம் செய்ய உள்ளதால் இனச்சுழற்சி விபரம் அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக தகவல் பலகை மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக விளம்பர பலகைகளில் விபரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர், குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு அதே, கிராமத்தைச் சார்ந்தவர், அதே கிராம பஞ்சாயத்தை சேர்ந்தவர்கள் அல்லது 10 கி.மீ.க்குள் இருத்தல் வேண்டும்.
மாதிரி விண்ணப்ப படிவங்கள் அந்தந்த வட்டார குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்த மாதிரி விண்ணப்ப படிவங்களை பார்த்து தங்கள் விண்ணப்பங்களை தயாரித்து விளம்பரம் பெறப்பட்ட நாளிலிருந்து மனு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.08.2017 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மனு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர் வசிப்பிட ஆதாரமாக கீழ்க்கண்ட வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி இரசீது, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனுமொரு சான்று இணைக்கப்பட வேண்டும்.
இதுகுறித்த மேலும், விபரங்களுக்கு மாவட்ட திட்ட அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என்ற முகவரியில் நேரில் அணுகலாம் என தெரிவித்துள்ளார்.