Joint drinking water project from Pennakonam panchayat to 73 villages; Perambalur Collector Works Inspection!

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகிலுள்ள பெண்ணகோணம் ஊராட்சியிலிருந்து 73 கிராமங்களைச் சேர்ந்த 87,200 பொதுமக்களுக்கு ரூ.22.84 கோடி மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீது வழங்கிட மேற்கொள்ளப்பட்டு வரும் முதற்கட்ட பணிகளை கலெக்டர் வெங்கடபிரியா பார்வையிட்டார்.

வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமங்களுக்கு உள்ளுர் நீர் ஆதாரத்தின் வழியாகவும், திருமானூர் – திருமலைபாடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாக கொண்டு அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெண்ணகோணம் ஓகளூர் பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 645 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாகவும், பொதுமக்களின் நீரின் தேவையின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் கடைமடை பகுதிகளுக்கு போதுமான அளவில் குடிநீர் விநியோகிக்க இயலவில்லை.

இதன் காரணமாக பெண்ணகோணம் ஓகளூர் பகுதிகளுக்கு அருகேயுள்ள வெள்ளாற்றினை நீர் ஆதாரமாக கொண்டு 4 உறை கிணறு ஏற்படுத்தி அதன்மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டு தமழிக அரசானது அனுமதியளித்து ரூ.22.84 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இக்கிணற்றினை ஏற்படுத்திட இப்பகுதி மக்களின் ஆதரவை பெற்று யாருக்கும் எவ்வித இடையூறும், பாதிப்புமின்றி புதிய திட்டத்தினை செயல்படுத்திட வேண்டும்.

மேலும், வெள்ளாற்றின் கிளை கால்வாய்களில் உள்ள செடி,கொடி மற்றும் கருவேல மரங்களை அகற்றிடவும் சேதமடைந்த வரத்து வாய்க்கால்களை சீர்படுத்திடவும் கால்வாய் பகுதிகளில் உள்ள மண் திட்டுக்களை அகற்றி தண்ணீரானது எளிதில் கடந்து செல்ல வழி ஏற்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!