Kalaingar Karunanithi is an Era: Seminar on Perambalur on behalf of Uraiyadal Amaippu
உரையாடல் என்ற அமைப்பு சார்பில், கலைஞர் ஒரு சகாப்தம் என்ற தலைப்பில், பெரம்பலுாரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
லட்சுமி லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கத்துக்கு, டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். கவிஞர் பிரபாகரன் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ராமர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில், தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒரு சகாப்தம் என்ற தலைப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தங்கராசு, தி.மு.க., மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் துரைராஜ், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் காமராஜ், பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் தாமோதரன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் டாக்டர் வல்லபன் நன்றி கூறினார்.