Kamal fans filed a protest against the removal of the bathroom (Toilet) near Perambalur

பெரம்பலூர் மாவட்ட கமலஹாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனு விவரம்:

பெரம்பலூர் காமராஜர் வளைவு வடபுறம், பெரியார் சிலைக்கு அருகே நகராட்சி சொந்தமான இடத்தில் கழிப்பிடம் இருந்தது. தற்போது நகராட்சி நிர்வாகம் அதனை அகற்றிவிட்டு ஹோட்டல் உள்ளிட்ட வணிக ரீதியலான கட்டிடங்களை கட்டி வாடகைக்கு விட திட்டமிட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் இருக்கும், வணிகர்கள் மற்றும், பணியாளர்கள், வெளியூரில் இருந்து வரும் பொதுமக்கள் அக்கழிப்பிடத்தை பயன் வந்தனர்.

மேலும், அதனை அகற்றி விட்டு வணிக நோக்கில் கட்டிடங்கள் கட்டும் திட்டத்தை கைவிட்டு தொடர்ந்து அந்த கழிப்பிடமாகவே செயல்பட நடவடிக்கை எடுத்து அப்பகுதியின் சுற்றுப் பகுதியின் காக்க வேண்டும் என கமல் ரசிகர்கள் சார்பில் இன்று மனு கொடுக்கப்பட்டது.

மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் சி.முத்துக்குமார், 16 வது வார்டை சேர்ந்த மூப்பாடி கனகராஜ், தர்மகர்த்தா அன்பழகன் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் உடன் வந்திருந்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, இது குறித்து பெரம்பலூர் நகராட்சி ஆணையரிடம் நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டார்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!