Kanimozhi MP visited Periyar statue in Perambalur.
பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி கலந்தாய்வு கூட்டம் இன்று பெரம்பலூரில் நடைபெற்றது.
அதற்கு வருகை தந்த திமுக மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான கனிமொழிக்கு பெரம்பலூருக்கு முன்பாக உள்ள கல்பாடி பிரிவு சாலை அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் பூங்காவில் , தந்தை பெரியார் மழலையர் தொடக்கப்பள்ளி சார்பில் தாளாளரும், முனைவருமான கி.முகுந்தன் சிறப்பு வரவேற்பு அளித்தார்.
அப்போது பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் 007 புகைப்பட நிலைய பணியாளர்கள் மகேந்திரன், நல்லையா, இலக்குமணன் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குன்னம் சி. ரஜேந்திரன், உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர், தந்தை பெரியார் பூங்காவில அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை பார்வையிட்டார். பின்னர் அங்கு பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பொன்மொழிகள் பொறிக்கப்ட்ட கல்வெட்டுகளையும் பார்வையிட்டார்.