Kannada, Telugu New Year: Yugadi Festival; Celebration in Perambalur district!

பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் கன்னடம், தெலுங்கு மொழி பேசுவோர்களின் புத்தாண்டு பண்டிகையான யுகாதியை இன்று கொண்டாடினர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன் கோவில்களில் வழிபட்டனர்.

யுகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக உகாதி பச்சடி செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி வேப்பம்பூ, மாங்காய், புளி, வெல்லம் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது.

இந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை கன்னட மொழியில் பேவு பெல்லா என அழைப்பர்.

தமிழ் நாட்டில் உகாதி, தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட தெலுங்கு பேசுவோராலும் கர்நாடக, ஆந்திராவில் இருந்து இங்கு குடியேறியவர்களாலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில், தெலுங்கு பேசுவோர் பெரும்பாலும், உகாதி பச்சடி செய்யவில்லை என்றாலும், இனிப்பு பதார்த்த வகைகளையும், முதலியவற்றை செய்து வழிபாடு நடத்தி உகாதியை கொண்டாடுவர். ஒரு சில சமுதாயத்தினர் கறிவிருந்தும் அளிப்பார்கள். மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும், சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவாறாகக் கொண்டாடுகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!