Kidnapped girl married: the young men, woman and 10-year jail sentence ; Namakkal court Judgement
17 வயது சிறுமியை ஆசை வாரத்தை கூறி திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணுக்கும் தலா பத்தாண்டு சிறை தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றத்தில் உத்திரவிடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே ஓவியம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் (வயது 24). இவர் கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கதிரேசன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த ஈரோடு வைரம்பாளையத்தைச் சேர்ந்த ரேவதி (வயது 32) ஆகிய இருவர் மீதும் பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.மேலும், பெண்ணை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன்படி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கதிரேசனுக்கு பத்தாண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதமும், ரேவதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்திரவிட்டது.