KRV Ganesan, the owner of Aswins, provides 365 days of lunch to 386 homeless people!

பெரம்பலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர்கள் என 386-நபர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கி வருகிறார் பெரம்பலூரில் உள்ள அஸ்வின்ஸ் உணவக உரிமையாளர்.

பெரம்பலூர் மாவட்டத்தில், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளை பராமரிக்கும் செஞ்சேரி வித்யாஸ்ரம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் வேலா கருணை இல்லம், காதுகேளாத மாணவர்களை பராமரிக்கும் கவுதமபுத்தர் பள்ளி, ஆதரவற்றோர்களை பராமரிக்கும் தண்ணீர் பந்தல் முதியோர் காப்பகம் ஆகியவற்றில், குடும்ப உறவுகளாலும், சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு பசியாற்றும் வகையில், அனைவருக்கும் ஆண்டு முழுவதும் மதிய உணவை இலவசமாக வழங்குகிறார் பெரம்பலூர் அஸ்வின்ஸ் உணவக உரிமையாளர் கேஆர்வி கணேசன். இதனால் ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்,காது கேளாத, வாய் பேச முடியாத மாணவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என தினமும் 386-பேர் பசியாறி பயனடைந்து வருகின்றனர்.

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் இந்த சேவையை வழங்கி வரும் அஸ்வின்ஸ் கேஆர்வி கணேசன், தற்போது கொரோனா ஊரடங்கு காலகட்டத்திலும் கூட தனியாக உணவு சமைத்து அவர்களுக்கு அனுப்பி வைத்து தனது சேவையை தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது சொந்த வாகனத்திலேயே தினமும் எடுத்துச் சென்று உணவு வழங்கி வரும் உணவகத்தின் சேவையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது இந்த சேவையால், தங்களிடம் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் பசியாறி வருவதோடு, தங்களுக்கும் பேருதவியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆதரவற்றவர்களின் பசி ஆற்றுவது ஆன்ம சந்தோஷத்தை தருவதாக கூறும் அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் கே.ஆர்.வி கணேசன். ஆதரவற்றவர்களை அன்போடு அரவணைத்து செல்வது நம் சமூகத்தின் பொறுப்பு என்கிறார். உணவளித்து உதவிக்கரம் நீட்டும் இந்த சேவையை போல் பூமியெங்கும் உறவுகளின்றி தவிப்போர்கள், ஆதரவற்றோர்களும் சமூகத்தில் அனைவரையும் போல் மேன்மை அடைய, நல்லெண்ணம் கொண்டர்வர்கள் அஸ்வின்ஸ் உரிமையாளர் கே.ஆர்.வி கணேசனை போன்று உதவ முன்வரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!