பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.இராமச்சந்திரன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.கீரனூர் கிராமத்தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய வேட்பாளர் ஆர்.டி.இராமச்சந்த்திரன் நோவாநகர், திருமாந்துறை, பெண்ணக்கோணம், கீழாக்குடிக்காடு, கழனிவாசல், அத்தியூர், ஒகளூர் உட்பட 18க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
பிரச்சாரத்தின் போது, அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி பேசிய வேட்பாளர் பொதுமக்கள் முன் வைத்துள்ள அனைத்து கோரிக்கைகளை சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளில் செய்து தருவதாக உறுதியளித்து தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் துணை சபாநாயகர் அருணாச்சலம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வெடி வெடித்தும், சால்வை அணிவித்தும், ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.