பெரம்பலூர் அருகே உள்ள எசனை இரட்டை மலை சந்து கே.புதூர் பகுதியில் வசிப்பவர் முருகேசன் மகன் ரமேஷ் (35), இவர் விவசாயதுடன் உப தொழிலாக ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இன்று மாலை ரமேஷிற்கு சொந்தமான ஆடு ஒன்றை மர்ம நபர்கள்சிலர் டூவீலர் கடத்தி சென்றதை பார்த்த ரமேஷ் கூச்சலிட்டவாரே துரத்தி சென்றதோடு, செல்போன் மூலம் பக்கத்து ஊரான குரும்பலூக்கு தகவல்தெரிவித்துள்ளார். இதனையறிந்த குரும்பலூர் மக்கள் டூவீலரின்ஆட்டுடன் வந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதுபற்றி தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பொது மக்களிடம் பிடிபட்ட திருடர்களை தங்களிடம் ஒப்படைக்க கூறினர். அதற்கு ஏற்கனவே ஆடு, மாடு உள்ளிட்ட கால் நடைகள் திருடு போனது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் பல்வேறு புகார் அளித்தும்போலீசார் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதனால் நாங்கள் பிடித்தோம், நாங்கள் தண்டனை கொடுத்து கொள்கிறோம் என வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரம்பலூர், துறையூர் சாலையில் சுமார் 1 மணிநேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து தொடர் பேச்சு வார்த்தையில்ஈடுபட்டு ஆடு திருடிய குற்றவாளிகள் மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்வதாகஉறுதி அளித்து பொது மக்களை சமாதானம் செய்த போலீசார், அவர்களிடமிருந்துபிடிபட்ட நான்கு பேரையும் மீட்டு வாகனத்தில் ஏற்றி பெரம்பலூர் காவல் நிலையம் அழைத்து வந்துவிசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் பொதுமக்களிடம் பிடிபட்டவர்கள் எசனை கிராமத்தை சேர்ந்த பிச்சைமணி (32), சரவணன் (27), வீரா (21), தமிழரசன் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர் விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.
டூவீலரில் ஆடு திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை பொது மக்கள் துரத்திபிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.