பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் நடைபெற்று வருகிறது. மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் காவல் கட்டுப்பாடு அலகின் சார்பில் ஹெச்.ஐ.வி (எய்ட்ஸ்) விழிப்புணர்வு குறித்த துண்டறிக்கைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை மாவட்ட நம்பிக்கை மையம் மேற்பார்வையாளர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் லப்பைக்குடிகாடு அரசு முதன்மை ஆரம்ப சுகாதார நிலைய ஆற்றுநர் ஜெயா, களப்பணியாளர் ஆகியோர் இணைந்து பொதுமக்களுக்கு பால்வினை நோய்கள், காசநோய்கள், சமூக பாதுகாப்பு திட்டங்கள், ART தொடர்பான விளங்கங்கள், ஆலோசனைகள் வழங்கினர்.
ஹெச்.ஐ.வி., பரிசோதனைகளை செய்து கொள்ள அருகில் உள்ள நம்பிக்கை மையத்திற்கு சென்று செய்து கொள்வது குறித்தும் எடுத்துரைத்தனர்.
இந்நிகழச்சியில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுபாடு அலகு பணியாளர்கள் ரேவதி, சுதா ஆகியோர் கலந்து கொண்டனர்.