Legal Aid Day : Awareness Rally in Perambalur : Judge begins.
ஏழை எளிய மக்களுக்கும் நீதிபெறுவதில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் “Legal services Authority act 1987” ஆனது கடந்த 09.11.1995 அன்று நடைமுறைக்கு வந்தது. அவ்வாறு நடைமுறைக்கு வந்த நவம்பர் 9-ஆம் நாள் ஓவ்வொரு வருடமும் தேசிய சட்ட சேவைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இயங்கி வரும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இயங்கி வரும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் “Connecting to Serve” என்ற தலைப்பின் கீழ் பொதுமக்கள், பள்ளி மாணாக்கர்கள் ஆகியோர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் முலமாகவும், சிறை சாலையில் உள்ள சிறை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் முலமாகவும், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், அரசு பேருந்துகள், ஆகியவற்றில் விளம்பர படுத்துதல் முலமாக இலவசமாக சட்ட உதவி பற்றியும், சமரச மையத்தை பற்றியும், விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதை சேர்ந்து வானொலி தொலைக்காட்சி கேபிள் டிவி முலமாகவும், “Mobile Van” –ல் ஆவணப்படங்கள் திரையிடபடுதல், நடைபயணம், இருசக்கர வாகன பயணம் முலமாகவும், வீடுதோறும் சென்று சமுதாயத்தில் பொருளாதரத்தில் நலிவுற்ற மக்களை சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் இலவச சட்ட உதவி கிடைக்கப்பெற, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்ச பேரில் இன்று, பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
பேரணியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தொடங்கிய பேரணி பழைய பேருந்து நிலையம் சென்று முடியவமைந்தது.
இப்பேரணியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், காவல் துறையினர், அரசு அலுவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.