Legal Awareness Rally in Perambalur tomorrow: Judge begins.
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டப் பணிகள் விழுப்புணர்வு தினவிழாவை முன்னிட்டு பேரணி நடக்கிறது. பெரம்பலூர் பாலக்கரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே காலை 9 மணி அளவில் தொடங்கும் பேரணி பழைய பேருந்து நிலையம் சென்று முடியவடையும் என்றும், பேரணியை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.பாலராஜமாணிக்கம் தொடங்கி வைக்கிறார். இப்பேரணியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்ப்பட்டுள்ளது.