Legislative work on the Commission’s plea to unorganized workers Awareness Camp in perambalur

பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் இன்று பெரம்பலூர் நகராட்சியில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சட்ட உதவி மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழச்சியில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான அரசின் திட்டங்கள், சட்ட உதவிகள், தொழிலாளர் நல வாரியம் ஆகியவற்றின் பணிகளை குறித்து நீதிபதி வினோதா ஷேர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தெரிவித்தார்.

மேலும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் யார், யார் என்றும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் மனு கொடுத்தால் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.

இம்முகாமில், நகராட்சி ஆணையர் முரளி, சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் சுந்தரராஜன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீதிபதி வினோத குறைகள் இருந்தால் தெரிவிக்கலாம் என கூறிய போது ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் தெரிவித்ததாவது :

போலீசார் அசல் சான்றிதழ்களை பரிசோதனையில் எடுத்து சென்றால் திரும்ப கொடுக்க 10 முதல் 15 நாட்களுக்கு மேல் காலம் கடத்துவதாகவும், பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆட்டோ நிறுத்துமிடத்தில் தனியார்கள் சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை குறைகள் தெரிவித்தனர். வழக்கறிஞர் ராஜா நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!