Liquor store through a hole in the wall worth Rs 20 thousand woth wine bottle theft

பெரம்பலூர் அருகே அரசு மதுபான கடையின் பின் பக்க சுவற்றில் துளையிட்டு கடைக்குள் இருந்த மதுபாட்டில்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் அன்னமங்கலம் பிரிவு சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இந்த கடையில் நேற்று இரவு வழக்கம்போல் கடையின் விற்பணையாளர் பழனிவேல் ஆகியோர் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

இன்று வழக்கம்போல் கடையை திறக்க வந்தபோதுபோது கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு அதன் வழியாக உள்ளே சென்று மதுப்பாட்டில்கள் திருடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அரும்பாவூர் போலீசில் பழனிவேல் புகார் செய்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் திருட்டு போன கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கடையில் சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!