Local Body Elections: At the first ballot in Perambalur, the people voted with enthusiasm.

பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 1,019 இடங்களுக்கான உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்கான ஓட்டுப்பதிவு இன்று (27ம்தேதி) நடைபெறுகிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு 94,084 ஆண் வாக்காளர்களும் 95,045 பெண் வாக்காளர்களும், இதரர் 13 வாக்காளர்களும் என இத்தேர்தலில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 507 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் .

பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 122 மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 171 என மொத்தம் 293 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடி மையங்களில் சாய்தளம், சாமியான பந்தல், கழிவறை, மின், குடிநீர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் ஒன்றியத்தில் 36 பதற்றமான ஓட்டுச்சாவடிகளும், 19 மிக பதற்றமான ஓட்டுச்சாவடிகளும், வேப்பூர் ஒன்றியத்தில் 28 பதற்றமான ஓட்டுச்சாவடிகளும், 20 மிகவும் பதற்றமான ஓட்டுச்சாவடிகளும் என மொத்தம் 103 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவினை ஒளிப்பதிவு மற்றும் நுண்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது

பெரம்பலூர் ,வேப்பூர் ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகள் மற்றும் தேர்தல் பணியில் 1,305 பேரும் என மொத்தம் 2,221 பேர் ஈடுப்பட்டுள்ளனர்.

இதே போல் 103 பதற்றமான ஓட்டுச்சாவடி மையங்களில பலத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து ஓட்டுச்சாவடிகளில் 500 போலீசார் மற்றும் 200 ஊர்க்காவல்படை மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு மன்னர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!