Local elections: campaigning door to door, pouring rain with umbrella
பெரம்பலூர் மாவட்டத்தில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கொட்டும் மழையிலும் தனது ஆதரவாளர்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.
மேலும், ஆதரவாளர்களாக களம் காணுபவர்கள் பிரியாணி உள்ளிட்ட கவனிப்புகளால் உற்சாகத்துடன் கூட்டத்தோடு கூட்டமாக தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாக கல் குவாரிகள், ஆற்று மணல் குவாரிகள், ரியல் எஸ்டேட் தொழில் நடக்கும் ஊர்களில், தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பணத்தை அள்ளி செலவு செய்து வருகின்றனர்.
பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்வதை கூட விட்டுவிட்டு தனது ஆதரவாளர்கள் வெற்றி பெற கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது காலை, மாலை நேரங்களில் தீவிரமாக களம் காண்கின்றனர்.