Local elections in alliance with DMK: Pon.kumar
பெரம்பலூரில் தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தமிழக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்க ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகை புரிந்த அதன் தலைவர் பொன்.குமார் இன்று மாலை தெரிவித்ததாவது :
தமிழ்நாட்டில் கல்குவாரி தொழிலில் கிருஷ்ணகிரி,தர்மபுரிக்கு அடுத்து பெரம்பலூர் மாவட்டம் இடம் பெற்றுள்ளது. கட்டுமானத்தொழிலில் 38 வகையான தொழில்கள்-தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கட்டமைப்புக்கு மிக அத்யாவசியமானது ஜல்லிக்கற்கள் தொழில்ஆகும்.
இந்தியாவில் ஏறத்தாழ 1 கோடி தொழிலாளர்கள் கல்குவாரிகளில் கூலிவேலை செய்துவருகின்றனர்.
ராஜஸ்தான், உத்திரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கல்குவாரி தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர். ஆனால் பீகார், தமிழ்நாடு, ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே கல்உடைக்கும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் செயல்பட்டுவருகிறது. இதுபோன்று அனைத்து மாநிலங்களிலும் நலவாரியம் ஏற்படுத்தி, கல்உடைக்கும் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இணைத்து நலஉதவிகள் வழங்க வேண்டும்.
இவர்களில் ஆலை முதலாளிகளிடம் முன்பணமாக பெற்ற தொகையை உரிய நேரத்தில் திருப்பி தரமுடியாததால் கொத்தடிமைத் தொழிலாளர்களாக ஆக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பு, விபத்தில் இறந்தால் உரிய நஷ்டஈடு ஆகியவை வழங்கப்படுவதில்லை.
மதுரையில் 3 தொழிலாளர்கள் கல்குவாரியில் விபத்தில் இறந்துள்ளனர். அதற்கு கல்குவாரி உரிமையாளர்கள் அல்லது தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்கவில்லை. ஆகவே எங்களது கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம்.
கல்உடைக்கும் தொழிலாளர்கள் விபத்தில் இறந்தால் ரூ.5லட்சம் நிதி வழங்குவது மறுக்கப்படுகிறது. கல்குவாரி தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு திருமணஉதவித்தொகை, 60 வயதில் ஓய்வூதியம், ஆகியவை மறுக்கப்படுகிறது.
கடந்த 8-ஆம் தேதி புதுடெல்லியில் தேசிய கல்குவாரி தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் விரைவில் கூட்டமைப்பு உருவாக்கப்படும்.
காவிரி நதிநீர் குறித்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசித்து தீர்வு காணவேண்டும். வருகிற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிடுவோம், என தெரவித்தார்.