Local elections: voter list, issued today, was put on public view

voters list பெரம்பலூர் : நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், பேரூராட்சி- நகராட்சி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் இன்று(19.9.2016) வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வாக்காளர்களின் பட்டியல் துறைமங்கலம் டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, அன்னை இவா மேரி கோக் மேல்நிலைப்பள்ளி, சங்குப்பேட்டை ஒன்றிய துவக்கப்பள்ளி, ரோவர் மேல்நிலைப் பள்ளி, அன்னை பர்வதம்மாள் பள்ளி, ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளி, டோம்னிக் மேல்நிலைப்பள்ளி, கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி, அரணாரை ஊராட்சி ஒன்றிய பள்ளி, பாத்திமா மேல்நிலைப் பள்ளி, மதரசா சாலையில் உள்ள மௌலானா மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 இடங்களிலும், நகராட்சி அலுவலகத்திலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும், ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், அனைத்து பேரூராட்சி அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளலாம்.

இந்த வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்ப்பதற்கான விண்ணப்பமோ, அல்லது பதியப்பட்டுள்ள ஒரு பெயருக்கோ அல்லது பட்டியலில் கண்ட விவரத்திற்கோ மறுப்புரை கூற விரும்புவோர் மேற்கொண்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய குறிப்பிடப்படும் இறுதி நாள் வரை தங்களது கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளை சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

கோரிக்கை மற்றும் மறுப்புரைகளின்மேல் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வாக்காளர் பதிலு அதிகாரியால் சேர்க்கவோ, நீக்கவோ, திருத்தவோ செய்யும் ஆணைகளின் அடிப்படையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஊரக மற்றும் நகர்புற வாக்கு பதிவு அலுவலர்களால் முறையாக மேற்கொள்ளப்படும்.

அதன்படி பெரம்பலூர; மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களும், நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு நகராட்சி ஆணையரும் வாக்காளர் பட்டியலை வெளியிட்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!