Love affair: Trichy police killed after trying to commit suicide by eating rat kill paste!
திருச்சி மாவட்டம், புதூர் உத்தமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சுரேஷ் (31). கடந்த 2007ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர் லால்குடி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வந்த நிலையில், அதே பகுதியில் உள்ள புள்ளம்பாடி கிராமத்தை சேர்ந்த வீரமுத்து என்பவரின் மகளான நதியா(34), என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
சுரேஷின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இதன் காரணமாக மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ் கடந்த 1ஆம் தேதி பெரம்பலூர் வந்து வெங்கடேசபுரம் பகுதியிலுள்ள பாண்டியன் லாட்ஜில் தனியார் விடுதியில் அறை எடுத்த தங்கியிருந்த அவர், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சுரேஷ், மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள கேஎம்சி மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து தனிப்பிரிவு ஏட்டு ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.