Man arrested for killing wife in family dispute near Perambalur
பெரம்பலூர் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு அருகே உள்ள ஒகளூரை சேர்ந்தவர் ஆறுமுகம் (56), இவரது மனைவி முத்துலட்சுமி (47), இன்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் வீட்டில் இருந்த போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் ஆத்திரத்தில் கணவன் ஆறுமுகம், மனைவி முத்துலட்சுமியை கொடுவாளலால் தலையில் வெட்டியதில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. இதில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே முத்துட்சுமி பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்த கணவனை கைது செய்து போலீசார் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.