Manimekalai Award for the year 2024-25: Perambalur Collector Information!
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கள பகுதி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர்ப்புற அளவிலான கூட்டமைப்புகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்குவதற்கு சமுதாய அமைப்புகள் தேர்வு செய்யப்பட உள்ளது.
எனவே, சிறந்த முறையில் குழு கூட்டங்கள், நிர்வாக சுழற்சி முறைமாற்றம், நிதி வரவு-செலவு, மேற்கொள்ளும் தொழில், தரம் மற்றும் தணிக்கை, வங்கி கடன், அடிப்படை பயிற்சி மற்றும் தொழில்கள் பயிற்சி, விழிப்புணர்வு விவரங்கள், சமுதாய மேம்பாட்டு பணியில் ஈடுபட்ட விவரம், கிராம சபை பங்கேற்பு, மாற்றுதிறனாளி மற்றும் முதியோர் மேம்பாட்டில் பங்கு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் ஊரக பகுதியை சேர்ந்த சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகரப்புற அளவிலான கூட்டமைப்புகள் இதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க வட்டார அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மகளிர் திட்ட அலுவலகத்திலும் 10.04.2025 முதல் 15.04.2025 வரை நேரில் அளிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் வட்டார இயக்க மேலாளர் 63837 74958 என்ற எண்ணிலும், ஆலத்தூர் வட்டார இயக்க மேலாளர் 96599 35852 என்ற எண்ணிலும், வேப்பந்தட்டை வட்டார இயக்க மேலாளர் 80987 39490 என்ற எண்ணிலும், வேப்பூர் வட்டார இயக்க மேலாளர் 88704 60112 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.