Medical and Rehabilitation Camp on behalf of Disabled Persons Welfare Department of Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும், மானியத்துடன் கூடிய வங்கிக் கடன், குறைந்த வட்டி வங்கிக் கடன், மாணவ மாணவியா;களுக்கான கல்வி உதவித்தொகை, பராமரழப்பு உதவித்தொகை உள்ளிட்டவைகளை தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் பெறவேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் பெறுவதற்கான மதிப்பீடு முகாம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 ஒன்றியங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டு கடந்த 21.11.2017 அன்று வேப்பூரிலிலும், 22.11.2017 அன்று வேப்பந்தட்டை ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் 23.11.2017 அன்று பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (25.11.17) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து 14 துறைகள் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற சிறப்பு முகாமை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மருதைராஜா, மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
இம்முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்களை செய்து வரும் பெங்களூர் அலிம்கோ என்ற மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களை செய்துகொடுக்கும் வகையில் இச்சிறப்பு முகாமில் அலிம்கோ நிறுவனத்தின் செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் நிபுணர் செவித்திறன் கண்டறியும் நிபுணர் மற்றும் மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் வருகை தந்து மாற்றுத்திறனாளிகளை பார்வையிட்டு அவர்களுக்குத்தேவையான உபகரணங்கள் குறித்தும், அவற்றின் அளவுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்தனர்.
கை,கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்கள் பொருத்துவதற்காக அவர்களுக்கு தேவையான அளவில் செயற்கை உபகரணங்களை தயாரிப்பதற்காக சரியான அளவீடுகளை எடுக்கும் பணிகளையும் மேற்கொண்டனர்.
இன்று நடைபெற்ற முகாமில் 18 வகையான உபகரணங்கள் வேண்டி 48 நபர்களும், கடன் உதவித்தொகை வேண்டி 16 நபர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு வேண்டி 51 நபர்களும், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர 50 நபர்களும், ஆதார் அட்டை வேண்டி 5 நபர்களும், முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை வேண்டி 20 நபர்களும், மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய அடையாள அட்டை வேண்டி 50 நபர்களும், இலவச பேருந்து பயண அட்டை வேண்டி 10 நபர்களும், கல்வி உதவித்தொகை வேண்டி 8 நபர்களும், கண்பார்வை அறுவை சிகிச்சை வேண்டி 15 நபர்களும் என மொத்தம் 273 நபர்கள்; விண்ணப்பங்களை அளித்தனர். அனைவரின் விண்ணப்பங்களும் உரிய பரிசீலினைக்குப் பின்னர் தகுதியுடைய நபர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் விரைவில் செய்து தரப்படும்., என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.
இம்முகாமில் மனநலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவர் கிருஷ்மூர்த்தி, கை,கால் தொடர்பான பிரச்சனைகளுக்கு எலும்பியல் மருத்துவர் அறிவழகன், கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு மருத்துவர் ஆனந்தமூர்த்தி, காது, மூக்கு தொடர்பான பிரச்சனைகளுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவர் தேவேந்திரன், குழந்தைகள் நல தொடர்பான பிரச்சனைகளுக்கு குழந்தைகள் நல மருத்துவர் கலா ஆகியோர்களால் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் உபகரணங்கள் தேவைப்படும் நபர்களுக்கு உரிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் வருவாய், சமூக நலம், மாற்றுத் திறானாளிகள் உள்ளிட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.