MGR, 104th Birthday: Honour by AIADMK in Perambalur. Led in RT Ramachandiran
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூரில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.இராமச்சந்திரன், தலைமையில் மாலை அணிவித்து கட்சியினர் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆர் புகழ் ஓங்குக என கோசமிட்டனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு உருண்டைகள் (லட்டு) வழங்கப்பட்டது. இதுபோல் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடஙகளில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படங்களுக்கு அதிமுகவினரும், அவரது ரசிகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல கிளைகளில் புதிய கொடியும் ஏற்றப்பட்டது.
இதில் பெரம்பலூர் எம்.எல்.ஏ ஆர். தமிழச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம், செல்வக்குமார், ரவிச்சந்திரன், சசிக்குமார், செல்வமணி, பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, பூலாம்பாடி வினோத், குரும்பாலூர் செல்வராஜ், அரும்பாவூர், ரெங்கராஜ், மற்றும் பல்வேறு மாநில, மாவட்ட, ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், இளைஞர் -இளம்பெண்கள் பாசறை பொறுப்பாளர்கள், தகவல் தொழில்நுட்ப அணியினர், மாவட்ட இணைச் செயலாளர் ராணி, மாவட்ட துணைச்செயலாளர் கு.லெட்சுமி, மாவட்ட மகளிரணி செயலாளர் க.ராஜேஸ்வரி கீழப்புலியூர் பத்ராசெல்வம், பெரம்பபலூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜானகிசின்னசாமி, ஒன்றிய பொருளாளர் டி.பன்னீர்செல்வம், எசனை ஊராட்சித் தலைவர்கள் எசனை சத்யாபன்னீர்செல்வம், கோனேரிப்பாளையம் கலையரசி ரமேஷ், பாளையம் சரவணன், காடூர் ஸ்டாலின், அந்தூர் ராஜேந்திரன், சித்தளி கணேசன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் கீழப்புலியூர் நடராஜன், பாடாலூர் அ.வேல்முருகன், உள்பட ஏரளாமான அதிமுகவினர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.