MGR Century Festival Memorial Road Service: Minister Thangamani started.
நாமக்கல்லில் ரூ. 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நினைவு சாலை அமைக்கும் பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலை சேமிப்பு கிடங்கின் மேற்கு பகுதியில் இருந்து திருவள்ளூவர் நகர் வழியாக போதுப்பட்டி மயானம் வரை ரூ. 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.
மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு, எம்எல்ஏ பாஸ்கர், நாமக்கல் நகராட்சி கமிஷனர் (பொ) கமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்று பணிகளை அடிக்கல் நாட்டிவைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் நாமக்கல் நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் கண்ணன், நாமக்கல் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொரி சண்முகம், நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் வக்கீல் விஜயக்குமார், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய முன்னாள் துணைத்தலைவர் ராஜா, நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் மாதேஸ்வரா பாலன், ராமலிங்கம், அனுராதா பாலமுருகன், சம்பத், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் கோபிநாத், நகர துணை செயலாளர்கள் நரசிம்மன், சன்பாலு, நகர பொருளாளர் ராஜா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.