Minister S.S. Sivashankar Corona Disease Prevention and Protection Works inspected

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான, எஸ்.எஸ். சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு பேரூராட்சி அலுவலகம், கொரோனா வைரஸ் தடுப்பூசி முகாம், லப்பைக்குடிக்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது அவர் தெரிவித்தாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக மக்களை கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்திட முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து அல்லும் பகலும் அயராது பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் முன்னிருந்த ஆக்ஸிஜன் பற்றாக் குறையினை போக்கிட இந்தியா மட்டுமல்லாது பிற நாடுகளிலும் உள்ள உபரிஆக்ஸிஜனை போர்க் கால அடிப்படையில் கொண்டு வரச் செய்து, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற நிலையினை விரைவாக மாற்றி, பொதுமக்களின் மருத்துவ தேவையினை பூர்த்தி செய்துள்ளார்.

அதேபோல் ரெம் டெசிவர் மருந்து சென்னையில் மட்டுமே கிடைக்கும் என்ற நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்திட வழிவகை செய்து, கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பாதுகாத்திட வழிவகை செய்துள்ளார். பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறையினை போக்கிட அனைத்து இடங்களிலும் தற்காலிக மருத்துவமனைகள் ஏற்படுத்தி அனைவருக்கும் படுக்கை வசதியுடன் மருத்துவ சிகிச்சை வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதனைப் போல கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதனை கண்காணித்திட மாவட்டந்தோறும் அமைச்சர்களை நியமித்து பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்குவதில் எவ்வித தொய்வும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

அதனடிப்படையில், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட லப்பைக்குடிகாடு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றுநோயினை கட்டுப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த் தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தி கொரோனா வைரஸ் நோயினை கட்டுப்படுத்தும் தடுப்பூசி செலுத்தும் பணி, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு சிறப்பான சிகிச்சையினை தொடர்ந்து வழங்கிட தேவையான மருத்துவ வசதிகள், படுக்கை வசதிகள், உபகரணங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ப்பட்டது. பொதுமக்களிடையே கொரோனா வைரஸின் தாக்கம் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதன் மூலம் நோயின் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்பணர்வு ஏற்படுத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தமிழக அரசின் துரித நடவடிக்கையின் மூலம் கொரோனா நோய் பரிசோதனைகள் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் நாள்தோறும் நமது நாட்டிலேயே அதிகபட்ச அளவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை தமிழ்நாடு தான் அதிக அளவு மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஒருவேளை கொரோனா தொற்று தாக்கினாலும் அதனால் ஒரு பெரிய பாதிப்பு ஏற்பட நிச்சயம் வாய்ப்பில்லை. நிச்சயமாக இருக்காது. எளிதாக தொற்றை வெல்லலாம் அதனால் பொதுமக்கள் தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அரசு எவ்வளவு முயற்சி மற்றும் நடவடிக்கை மேற்கொண்டாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பினால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்திட முடியும். எனவே பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள நிலையான வழிகாட்டு முறைகளான தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக பராமரித்தல்; போன்றவற்றை முறையாக பின்பற்றவேண்டும் என தெரித்தார்.

ஆய்வின்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் சி.ராஜேந்திரன், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பிரபா செல்லபிள்ளை, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியபிரகாசம், காவல் துணை கண்காணிப்பாளர் மோகன்தாஸ், வட்டார மருத்துவ அலுவலர் ராஜவேல், பேரூராட்சி செயல் அலுவலர்கள் சதீஷ்கிருஷ்ணன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!