Minister Sivasankar today inaugurated a new ration shop in Kunnam constituency !
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்டபட்ட சின்னவெண்மணி கிராமத்தில் புதியதாக அமைக்கப்பட்ட அரசின் கூட்டுறவு நியாய விலை அங்காடியை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னவெண்மணி ஊராட்சியில் தெற்கு பகுதியில் புதியதாக அமைக்கப்பட்ட நியாய விலை அங்காடியை கலெக்டர் வெங்கட்பிரியா தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று காலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, வேப்பூர் ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ராஜேந்திரன், ஊராட்சித் தலைவர் மருதாயிபெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் விஜயா ராஜாங்கம் மற்றும் கூட்டுறவுத் துறை பணியாளர்கள், உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு பணியாளர்கள் , பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர், அமைச்சர் சிவசங்கர் பொதுமக்களிடம், வீதிவீதியாக சென்று மக்களிடம், கோரிக்கை மனுக்களை பெற்றார்.