Minister SS Sivasankar personally visited the areas affected by the rains and provided relief aid.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயினாபுரம், தெற்கு மாதவி, சாத்தனூர், இலுப்பைக்குடி, பிலிமிசை, கொட்டறை – குரும்பாபாளையம் சாலை மற்றும் கொட்டறை அணைக்கட்டு ஆகிய பகுதிகள் மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கலெக்டர் வெங்கட பிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோருடன் இன்று பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மழை வெள்ளத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்ட அயினாபுரம் பகுதியில் 30 குடும்பங்களுக்கு அரசின் சார்பில் 10கிலோ அரிசி, வேட்டி, சேலை மற்றும் ரொக்கம் ரூ.1,000 மற்றும் அமைச்சர் சிவசங்கர் தனது சொந்த நிதியிலிருந்து வேட்டி, சேலை, பாய், போர்வை, 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட 29 குடும்பத்தினருக்கு வழங்கிய அவர், பின்னர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் 04.07.2021 அன்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. பெரம்பலூர; மாவட்டத்தில் சராசரியாக 38.0 மி.மீ ஆக மழை அளவு பதிவாகியுள்ளது. இந்த கன மழையின் காரணமாக மருதையாற்றின் கிளையான காட்டாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டடு ஓடைகளில் அதிக மழை நீர் சென்றதால் வரப்புகள் மற்றும் தடுப்பு சுவர்கள் சேதமடைந்தன.

அயினாபுரம், தெற்கு மாதவி, சாத்தனூர் இலுப்பைக்குடி, பிலிமிசை, கொட்டரை- குரும்பாபாளையம் சாலை மற்றும் கொட்டரை அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் பல பகுதிகளில் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளை இரண்டு புறமும் கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக கால்வாய்கள் கட்டப்பட்டு சாலைகள் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த 5 வீடுகளை புதியதாக கட்டித்தர மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வரப்பு வாய்க்கால்களை தூர் வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடைகளை அகலப்படுத்திட வேண்டும் எனவும், சுற்றுச்சுவரினை பலப்படுத்தி அதன் உயரத்தினை அதிகபடுத்திட வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கிராமப்புறங்களை சுற்றி சுற்றுச்சுவர; கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் பணிகள் தீவிரபடுத்தப்படும். ஏற்கனவே கட்டப்பட்ட சுற்றுச்சுவர்கள் 15 ஆண்டுகள் பழமை ஆகிவிட்டதால் மழைநீரின் அதிகபடியான அழுத்தத்தின் காரணமாக உடைந்து பழுது ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுச் சுவரின் தரத்தினை மேம்படுத்தி அதன் உயரத்தினை அதிகரிக்க வழிவகை செய்யப்படும். மழைக்காலங்களில் பொதுமக்கள் எளிதில் சென்றுவர தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்படும்.

கொட்டரை நீர்தேக்கப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு இதற்கு முன்னர் நேரடியாக சென்று வந்தனர். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கொட்டரை நீர்தேக்கத்தில் நீர் தேக்கப்ட்டு உள்ளதால் விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு செல்ல இயலவில்லை எனவும் அதற்கு பாதை வசதி வேண்டுமென கோரிக்கை வைத்துள்னளர். அப்பகுதிகளுக்கு உடனடி தேவையாக தற்காலிக சாலை வசதி ஏற்படுத்திடவும் மழை நீர் வெளியேற்றப்பட்வுடன் தடுப்புகளுடன் கூடிய நிரந்தர சாலை ஏற்படுத்தி தர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆய்வின்போது, டி.ஆர்.ஓ ராஜேந்திரன், ஆலத்தூர் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆலத்தூர் வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!