Minister’s eligibility to receive the prize to SC, ST, students can apply for conversion
scholarship அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது

தமிழக முதலமைச்சரின் பரிசுத்தொகை திட்டத்தின்கீழ் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் நல மாணவர்களுக்கு வருமான வரம்பு இன்றி தமிழக முதலமைச்சரின் தகுதி பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இப்பரிசுத் தொகை 2011-2012 ஆம் ஆண்டு முதல் ரூ.3,000 – ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. அதன் படி 2015-2016 ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் வகுப்பில் பயின்ற மாணவரர்களுக்கு 1073 மதிப்பெண்களும், மாணவிகளுக்கு 1101 மதிப்பெண்களும் தகுதி மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட மதிப்பெண்கள் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் தமிழை ஒரு பாடமாக பயின்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிட மாணவ, மாணவியர்கள் 2016-2017 ஆம் கல்வியாண்டில் தாங்கள் கல்வி பயின்று கொண்டிருக்கும் கல்வி நிலையத்தின் மூலமாக பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு விண்ணப்பித்து தமிழக முதலமைச்சரி தகுதி பரிசுத்தொகை பெற்று பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!